திங்கள், 3 ஆகஸ்ட், 2009

நக்கன் & சிவன் சொற்பிறப்பியல்

சிவன் முப்புரங்களை நகைத்து எரித்ததாகச் சொல்லப்பட்டதால் நக்கன் எனப்பட்டான்

நங்கு¹-தல் naṅku- 5 v. tr. prob. நகு-. [T. naṅgu.] To deride, mock at; பரிகசித்தல். நங்கவொழியினும் (பழமலை. 50). (இலக் அக.)


நங்கு² naṅku n. < நங்கு-. Derision, mockery; பரிகாசம். நங்கு தெறிப்பதற்கு நாடெங்கும் போதாது (ஆதியூரவதானி.).


நக்கன்¹ nakkaṉ= Šiva; சிவன். நக்கன் காண் (தேவா. 619, 2)


பரியை நரியாக்கியதால் நரியின் பெயரான நக்கன் என்பதிலிருந்து நக்கன் எனச் சிவன் அழைக்கப் பட்டான்


நக்கன்² nakkaṉ n. [T. nakka. K. nakke.] Fox; நரி. (W.)
ஏழை போல் இரந்துண்டு இருப்பதால் பிட்சாடனர் என்றும் நக்கி உண்பதால் நக்கன் என்றும் அழைக்கப்படுவான்

நக்கி¹ nakki n. < நக்கு-. [M. nakki.] Loc. 1. Destitute person, as one who licks scrapings; [நக்கியுண்போன்] ஏழை.நக்குணி nakkuṇi n. < நக்கு- + உண்-. 1. Mean cadger of food; உணவிற்குத் திண்டாடு வோன். Colloq.


நக்குப்பொறுக்கி nakku-p-poṟukki n. < id. +. 1. Beggar, as one who lives on refuse- food; எச்சிற்பொறுக்கி யுண்போன். நக்குப்பொறுக்கி களும் பறப்பர் (தனிப்பா. i, 290, 7). 2. Miser; உலோபி.


காலனைப் போல் அழிப்பதால் நக்கன் , சுடலையாடி ஆதலால் எரிக்கும் தொழில் கொண்டவன் என்னும் பொருளில் நக்கன் என்றும்,


நக்கு¹-தல் nakku- v. [T. nāku, K. nakku, M. nakkuka, Tu. nakkuni.] To consume; அழித்தல். உலகைநக்குங் கேடறு நிலைமைக் காலன் (ஞானவா. சுக்கிரன். 33), . To burn; சுடுதல். நனந்தலைப்பேரூ ரெரியு நக்க (புறநா. 57).--intr. To be destitute; வறுமைப்படுதல். அவன் கஞ்சிக்கு இல்லாமல் நக்குகிறான். Colloq.


சிவன் அம்மணமாய் நடம் ஆடியதால் நக்கன் எனப்படவில்லை. இலிங்க வடிவில் வழிபடப்பட்டதால் நக்கன் எனப்பட்டான். அம்மணத்தைக் குறிக்கும் நக்கம் , நக்கு என்னும் சொற்கள் தமிழ்ச் சொற்களே.


உல் (நீங்குதல்)->(நுல்)->(நல்)-> நக்கு (உடை இன்மை) nakku n. Nakedness; நிர்வாணம். (தேவா. 215, 6.) நக்கம்-> நக்கன்.


அம்மணத்தைக் குறிக்கும் சிலவேநியச் சொல் nagu என்பது தமிழ் நக்கு என்பதனோடு நெருங்கிய தொடர்புடையது


Skt, Nagna, Pkt, Nakka, Zd. maghna for naghna ; Lith. nu"ṣgas ; Slav. [nag˘u] ; Goth. nagaths ; Angl. Sax. nacod ; Eng. naked ; Germ. nackt.


அம்மணமாய் இறைவன் முன் ஆடியதால் தேவரடியார்கள் நக்கன் எனப்படவில்லை. நங்கை என்ற சொல்லிலிருந்து தோன்றியது நக்கன் (ஒப்பிடுக: தமக்கையைக் குறிக்கும் அக்கை, அக்கன்)=தேவரடியார்


நங்கை naṅkai , n. < நம்¹. 1. [M. naṅṅa.] Lady, woman of quality or distinction; பெண் ணிற் சிறந்தாள். (சூடா.) நங்கா யெழுந்திராய் (திவ். திருப்பா. 14). 2. Son's wife; மகன் மனைவி. என் னுட னங்கையீங் கிருக்கெனத் தொழுது (சிலப். 16, 14). 3. Elder brother's wife; அண்ணன் மனைவி. Cm. 4. A word added to aḵṟiṅai


நங்கை naṅkai -> நக்கன்¹ nakkaṉ-Ancient title of dancing-girls attached to temples; தேவதாசிகளுக்கு முற்காலத்து வழங்கிய சிறப்புப்பெயர். இத்தளி நக்கன் சோழகுலசுந்தரிக்குப் பங்கு ஒன்றும் (S. I. I. ii, 261).