Wife's sister's husband; தன் மனைவியின் உடன் பிறந்தாள் கணவன் என்ற சொல்லைக் குறிக்கும் சகலன் என்பது வடமொழிச் சொல்லான ஸகுலன் என்பதிலிருந்து வரமுடியாது . ஏனென்றால் சகுலன் என்ற சொல்லுக்கு ஒரே/அதே குடும்பத்தன்/குலத்தான் என்று தான் பொருள் படும். திருமணம் ஆன பின் மனைவி கணவனின் குடும்பம் அல்லது சாதி (குலக் கூட்டம்) -ஐச் சேர்ந்தவள் ஆகிறாள். கணவனைப் பொறுத்த மட்டில், அவள் உடன்பிறந்தவளின் கணவன் வேறு குடும்பத்தன் ஆவான். சக்களத்தி Sakkaḷatti, Co-wife, rival wife; மாற்றாளான மனைவி. சூது கற்ற சக்களத்தி (தனிப்பா. ii, 57, 140) என்பதைக் காண்க. rivalry என்று பொருள்படும் வகையில் சகளை, சகலன், சகலப்படி, சகலை, என்ற சொற்கள் பிறந்துள்ளன. கீழ்க் காண்க. சக்களத்திச்சண்டை cakkaḷatti-c-caṇṭai சக்களத்திப்போராட்டம். சக்களத்திப்போராட்டம் cakkaḷatti-p-pōrāṭṭam Mutual animosity or jealousy, as between rival wives; ஒருவனுடைய மனைவியருக்குள் நிகழும் பகைமை. சள்(சண்டை என்ற சொல்லின் மூலம்)->சள (sala)->(சக)-> (சக்க sakka )->சக்கள(sakkala)-> சக்களமை Sakkaḷamai 1. Rivalry between joint wives...