முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

etymology of Deepavali

பாவாணர் கூற்றுப்படி


 தீ (tī) -> தீ दी (dī) (Vedic usage) To shine. ஒளிர்

தீதல்=எரிதல், கருகுதல். தீத்தல்=எரித்தல், கருக்குதல். க.சீ.
தீ (tī) [Tamil] ->தீய் (tīy) [Tamil]. தீய்தல் (tīy-dal) [Tamil] =தீதல். தீய்த்தல்=தீத்தல். தீ (tī) ->தீவு ((tīvu)-> தீவம் (tīvam)=விளக்கு.
தீய் (tīy[Tamil]) -> தீய்ப்பு (tīyppu) [Tamil] -> தீபம் (tībam) [கொச்சை மற்றும் இலக்கிய வழக்கு), தீவம் (tīvam) [Tamil] 1. Lamp, light; விளக்கு. தூபநற் றீபம் வைம்மின் (திருவாச. 9, 1)., செம்பொற் றீவங்க ளுமலிதர (கோயிற்பு. திருவிழா.3). 2. Lamp-stand; விளக்குத்தண்டு. (பிங்.) 3. The fifteenth nakṣatra. சோதிநாள். (பிங்.) 4. Phosphorescent tree தீபமரம். சிந்துரந் திலகந் தீபம் (இரகு. ஆற்று. 11).
ദീപം (dībam) [Malayalam] A lamp, light
दीपः (dīpaḥ) [Sanskrit] A lamp, light;
दिवी (divī) [Marathi] 1. A sort of lamp. 2. a wooden stand or an iron spike supporting a receptacle for the oil.
தீபாலி tībāli, தீபாவலி tībāvali, தீபாவளி¹ tībāvaḷi அனைத்தும் சரியே. (தீபம் + ஆலி, தீபம் + ஆவலி, ஆவளி= வரிசை).
दीपाली (dipālī ) [Sanskrit] 'a row of lamp', a festival with illuminations on the day of new moon in the month Āśvina or Kārttika (Diwālī) தீவாளி
ദീപാളി (dībāḷi) ദീപാവലി (dībāli) [Malayalam] 1. a row of lights. 2. the lamp-feast at the new moon of October
ஆலி (கண்ணீர் போன்று தொடர்ந்து ஒழுகும் தன்மையது) அதிலிருந்து ஆவலி, ஆவளி என்பனவும் தோன்றின.
वलिः (valiḥ), वली (valī) என்ற வடசொற்களுக்கு 1A fold or wrinkle (on the skin); -2 A fold of skin on the upper part of the belly (especially of females regarded as a mark of beauty); -3 The ridge of a thatched roof. -4 A line made on the body with fragrant unguents. என்ற பொருள்களே உண்டு அந்த वलिः (valiḥ), वली (valī) என்ற சொற்களும் வரி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே.
வரி (vari) [Tamil] n. 1. Line, as on shells; streaks, as in timber; stripe; கோடு. நுண்ணிய வரியொடு திரண்டு . . . கண் (சீவக. 1702). 2. Ornamental marks on the breast; தொய்யில் முதலிய இரேகை. மணி வரி தைஇயும் (கலித். 76). 3. (Palmistry.) Lines at the joint of fingers or on the palm of hand; கையிரேகை. (பிங்.) 4. Course, as of bricks; line, as of writing; series, as of letters; orderly line, as of ducks in flight; row; ஒழுங்கு நிரை. குருகி னெடு வரி பொற்ப (பதிற்றுப். 83, 2). 5. Letter; எழுத்து. (நாமதீப. 673.) 6. Dot; புள்ளி. வரிநுதற் பொருதொழி நாகம் (நெடுநல். 117). 7. Spreading spots on the skin; தேமல். பொன்னவி ரேய்க்கு மவ் வரி (கலித். 22). 8. Beetle; வண்டு. (திவா.) 9. Sea; கடல். (பிங்.) 10. Tie, bandage; கட்டு. வரிச்சிலை யாற் றந்த வளம் (பு. வெ. 1, 16). 11. Junction of streets; பலதெருக்கூடுமிடம். (பிங்.) 12. Way; வழி. (உரி. நி.) 13. Music; இசை. (நாமதீப. 678.) 14. Tune; melody; இசைப்பாட்டு. வரிநவில் கொள்கை (சிலப். 13, 38). 15. (Nāṭya.) See வரிக் கூத்து. கண்கூடு வரியும் (சிலப். 3, 14). 16. A poem of the last Šaṅgam; கடைச்சங்கத்து நூல் களுள் ஒன்று. (இறை. 1, பக். 5.) 17. Loftiness; உயர்ச்சி. (பிங்.) 18. Length; நீளம். (சூடா.)
ஆவலி என்பது ஆ+வலி என்பதன் புணர்ப்புச் சொல்லன்று. இவ்விடத்து ஆ என்ற முன்னொட்டுக்குப் பொருள் கிடையாது. ஆலி என்பதன் திரிபே ஆவலி, ஆவளி.
ஆலி (āli) n. 1. Raindrops; மழைத்துளி. (சூடா.) 2. Hail; ஆலங் கட்டி. ஆலிபோல் . . . முத்திற்கும் (சீவக. 2786). 3. Opening shower of the rainy season; தலைப் பெயல் மழை. (பிங்.) 4. Wind; காற்று. (அக. நி.)
மழை போன்று தொடர்ந்து பெய்யும் கருத்தால் வரிசையைக் குறிக்கும் ஆலி என்ற சொல் இன்று தமிழில் வழக்கிழந்து, வடமொழியில் आलिः (āliḥ) , आली (alī) ஆக உள்ளது
ஆலி (āli) -> ஆளி (āḷi) [Tamil] n. 1. Female companion; பாங்கி. 2. Honest thought; சுத்தக் கருத்து. 3. Row; ஒழுங்கு. 4. Bridge; பாலம். 5. Uselessness; பயனின்மை.
आलिः (āliḥ) , आली (alī) [Sanskrit] f. 1 A female companion or friend (of a woman);. -2 A row, range, continuous line; -3 A line, streak. -4 A bridge. -5 A dike. -6 A line, race, family.
आळी (āḷī), अळी(aḷī) [Marathi] A lane, an alley, a row.
आळ (āḷa) [Marathi] m f Longing or hankering after: also importunate begging or beseeching. v घे, पाळ, पुरव. 2 f R A lane, an alley, a row
ஆலி (āli), ஆளி (āḷi) என்பனவற்றிலிருந்து அளபெடை காரணமாக ஆஅலி ஆஅளி என்பன ஆவலி (āvali), ஆவளி (āvaḷi) ஆக மாறின. தீபாவளி என்பது இன்றும் தீவாளி, தீபாளி என்பன பேச்சு வழக்கில் சரியாக உள்ளன. இலக்கிய வழக்கில் உள்ள சொற்களே சரி என இருக்க வேண்டியதில்லை.
முள் -> முழி (உலக வழக்கு)-> விழி = கண்ணின் கருவிழி, விழி.
மூக்கும் முழியும் என்பது உலக வழக்கு.
ஆவளி (āvaḷi) என்பது மேலும் என்றும் திரிந்துள்ளது. மலையாளத்தில் அவள் என்பது ஓள் என்று மாறும். மகன் என்பது மோன் என்றும் மகள் என்பது மோள் என்றும் மாறும்.
ஓளி ōḷi) [Tamil] n. 1. A continuous line, row; ஒழுங்கு. மாளிகையோளி (கம்பரா. மிதி. 22).
ஆவலி (āvali) -> ఓలి (ōli) [Telugu] A line, a row. వరుస.
ओळ (ōḷa) [Marathi) A row, a line, a rank. 2 A line as drawn by the pen, or a line of writing. 3 fig. Course; line of department or procedure
ആളി (āḷi ) [Malayalam] 1. Row. 2. female friend
ஆவலி (āvali), ஆவளி (āvaḷi) [Tamil] n. 1. Row, range, series; வரிசை. 2. Continuous line, lineage, dynasty; வமிசபரம்பரை.
ఆవలి (āvali) ఆవళి (āvali) [Telugu] n. Range, row, line, assembly.
ആവലി (āvail) [Malayalam] Row
आवलिः (āvaliḥ) आवली (āvalī) [Sanskrit] 1 A line, row, range; -2 A series, continuous line. -3 A dynasty, lineage.
தமிழிலக்கண விதிப்படியே தீபாவளி தீபாவலி என்ற சொற்கள் புணர்ந்துள்ளன.
தீபம் (tībam) + ஆவலி (āvali), ஆவளி= தீபாவலி (tībāvali), தீபாவளி (tībāvaḷi), தீவாளி (tīvāḷi), தீவளி (tīvaḷi)
தமிழில் ஆலி என்பது வரிசையைக் குறிப்பது வழக்கொழிந்து போனாலும் தீபாலி (tīpāli) என்பதில் இன்னும் உள்ளது.
దీపావళి (tībāvali) [Telugu] A row of lights, i.e., A feast held on the 14th day of the dark fortnight (bahula) in Aswayuja
दिवाळी (divāḷī) [Marathi] A row of lamps.) A festival with nocturnal illuminations, feastings, gambling &c., held during the concluding day of आश्विन, the day of new moon, and the two first days of कार्त्तिक
12. அ, ஆ வரினீற் றயனீ ளலுமாம்.
(இ-ள்.) அகர ஆகாரங்கள் வரின் ஈற்றயல் நீளலுமா மென்க.
(வ-று.) மரம் + அடி = மராடி, குளம் + ஆம்பல் = குளாம்பல்.
(வி-ரை.)
‘அகர ஆகாரம் வரூஉங் காலை
ஈற்றுமிசை அகரம் நீடலு முரித்தே’ (புள்ளி - 16)
என்பது தொல்காப்பியம். (153)
தமிழிலக்கண விதிப்படியே தான் வடமொழியிலும் இச் சொற்கள் புணர்ந்துள்ளன
தீப: दीपः (dīpaḥ) + ஆவலீ आवली (āvalī) எனப் புணர்ந்தால் தீப ஆவலீ, தீபயாவலீ என்றே கீழ்க்கண்ட விதிகளின்படி உருவாகும்.
दीपः (dīpaḥ) आवली (āvalī) + दीप आवली (dīpa āvalī)
சந்தி , सन्धिः = रुत्व -> यत्व-> लोप-सन्धिः
சூத்திரம் सूत्रम्/वार्तिकम्= ससजुषो रुः (8।2।66)-> भोभगो अघो अपूर्वस्य योऽशि (8।3।17)-> लोपः शाकल्यस्य (8।3।19)
दीपः (dīpaḥ) + आवली (āvalī) दीपयावली (dīpāvalī)
சந்தி , सन्धिः = रुत्व -> यत्व-सन्धिः
சூத்திரம் सूत्रम्/वार्तिकम्= ससजुषो रुः (8।2।66)-> भोभगोअघो अपूर्वस्य योऽशि (8।3।17)
दीपं (dīpaṃ) + आवली (āvalī)= दीपंआवली (dīpaṃ āvalī)
दीपम् (dīpam) + आवली (āvalī) =दीपमावली (dīpamāvalī)
சந்தி सन्धिः = இயல்பு. இதுவும் பொருந்தாது
ஆனால், மரம் + அடி என்பதில் மகரம் நீங்கி மராடி என்று ஈற்றயல் நீளும். அது போலவே தீபம் + ஆவளி தீபாவளி ஆனது போல் மகரம் நீங்கித் தமிழ் முறைப்படியே दीपावली (dīpāvalī) வடமொழியில் சொல்லுருவானது. வடமொழியில் दीपः (dīpaḥ) என்ற சொல்லே உள்ளது. दीपं (dīpaṃ)/ दीपम् (dīpam) என்ற சொல்லே கிடையாது.
दीप (dīpa) + आवली (āvalī)= दीपावली (dīpāvalī)
சந்தி सन्धिः = सवर्णदीर्घ-सन्धिः
சூத்திரம் सूत्रम्/वार्तिकम्= अकः सवर्णे दीर्घः (6।1।101)
விளக்குகளின் வரிசை போன்று கடன்காரர்கள் வரிசையாக வருவதால்/இருப்பதால் நொடிந்து போன நிலையைக் குறிக்கும் தீபாவளி, திவால் என்ற சொற்களும் ஆகுபெயரால் தோன்றின.
தீபாவளி (tībāvaḷi) [Tamil] n. Insolvent. திவால்.
திவாலா (tivālā), திவால் (tivāl) [Vulgar Tamil] n. Bankruptcy, insolvency;
தீவாளியா-தல் (tīvāḷi-y-ā- ) [Vulgar Tamil] , v. intr. To become bankrupt; கடனால் நிலை குலைதல்.
దినాలా (dinālā) దివాలా (divālā) [Telugu] n. Bankruptcy.
దివాలాకోరు (divālā-kōru) [Telugu]. n. A bankrupt.
ദീപാളി (dībāḷi) ദീപാവലി (dībāvali) [Malayalam] bankruptey,
ദിവാളി (divāḷi) [Tulu] bankruptey
दिवाळें (divāḷēṃ), दिवाळूं (divāḷḷūṃ [Marathi] Bankruptcy or insolvency.
दिवाला divālā [Hindi] bankruptcy, insolvency;
दिवालिया divāliyā [Hindi] a bankrupt; an insolvent.
दिवाली (divālī) [Hindi] a Hindu festival celebrated on the day of the new moon of कार्तिक, when lamps are lit on house-tops etc. symbolising the conquest of light over darkness and of good over evil; (fig.) times of merriment.
دوالا (diwālā) [Urdu] Bankruptcy insolvency

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Aryan Indra Vs Dravidian Indra

Brahmins’ lies about Indra and Vishnu Indra as told by Brahmins Vedas Indra is considered by Brahmins and linguist as the most important deity in Vedic Hinduism, and is celebrated in 250 hymns within the Rg Veda alone. It is claimed by the Brahmins and Indo Aryan Racist/Linguists that Indra was the supreme ruler of all the gods and the leader of Devas. Indra was god of war and greatest of all warriors. He was the strongest of all beings and ruled thunder and storms. Indra was the defender of all gods and mankind against the forces of the evil. He was further claimed and regarded as the creator god since he brings water to the earth and thus causes fertility. He has also the power to revive slain warriors who had fallen in the battle. Fraud Brahmins claim that on Manasottara Mountain are the abodes of four demigods. East of Sumeru Mountain is Devadhani, where King Indra lives, and south of Sumeru is Samyamani, the abode of Yamaraja, the superintendent of death. Simil...

ETYMOLOGY OF SAKALAI. சகலை என்ற சொல்லின் சொற்பிறப்பியல்

Wife's sister's husband; தன் மனைவியின் உடன் பிறந்தாள் கணவன் என்ற சொல்லைக் குறிக்கும் சகலன் என்பது வடமொழிச் சொல்லான ஸகுலன் என்பதிலிருந்து வரமுடியாது . ஏனென்றால் சகுலன் என்ற சொல்லுக்கு ஒரே/அதே குடும்பத்தன்/குலத்தான் என்று தான் பொருள் படும். திருமணம் ஆன பின் மனைவி கணவனின் குடும்பம் அல்லது சாதி (குலக் கூட்டம்) -ஐச் சேர்ந்தவள் ஆகிறாள். கணவனைப் பொறுத்த மட்டில், அவள் உடன்பிறந்தவளின் கணவன் வேறு குடும்பத்தன் ஆவான். சக்களத்தி Sakkaḷatti, Co-wife, rival wife; மாற்றாளான மனைவி. சூது கற்ற சக்களத்தி (தனிப்பா. ii, 57, 140) என்பதைக் காண்க. rivalry என்று பொருள்படும் வகையில் சகளை, சகலன், சகலப்படி, சகலை, என்ற சொற்கள் பிறந்துள்ளன. கீழ்க் காண்க. சக்களத்திச்சண்டை cakkaḷatti-c-caṇṭai சக்களத்திப்போராட்டம். சக்களத்திப்போராட்டம் cakkaḷatti-p-pōrāṭṭam Mutual animosity or jealousy, as between rival wives; ஒருவனுடைய மனைவியருக்குள் நிகழும் பகைமை. சள்(சண்டை என்ற சொல்லின் மூலம்)->சள (sala)->(சக)-> (சக்க sakka )->சக்கள(sakkala)-> சக்களமை Sakkaḷamai 1. Rivalry between joint wives...

Histroy of Sacrifice in India

Sacrifice: Sacrifice in Hinduism Sacrifice in Ancient India. Although many Hindus are vegetarian, there are Hindu temples in India as well as Nepal where goats and chickens are sacrificed. There are many village temples in Tamilnadu where this kind of sacrifice takes place. It is attested in the Tamil Grammar, namely Tolkaappiyam. கொற்றவைநிலை koṟṟavai-nilai, n. Theme of offering sacrifice to koṟṟavai and worshipping Her; கொற்றவைக்குப் பலியிட்டுப் பரவும் புறத்துறை. (தொல். பொ. 59.) In India, some semi-tribal Hindus, as well as some worshipper-communities of Shaktism (the Mother Goddess) offer sacrifice of goats and buffaloes to the deity. Among the Hindus of Nepal, animal sacrifices are common even today, not only for the mother goddess, but also for almost all deities of the Hindu pantheon. In these non brahminical sacrifices, no yajna is performed or required. These offerings to their Family deity may either be vegitarian or non vegitarian foods. படை¹-த்தல் paḍai- , 11 v. tr. [K. paḍē....